ஆபத்துக்கு ஓடிவரும் ஆல் இன் ஆல் ஆட்டோ சாமி

ஆபத்துக்கு ஓடிவரும் ஆல் இன் ஆல் ஆட்டோ சாமி

கரு.முத்து

அந்த ஊரில் சுதர்சன் என்று பேர் சொல்லிக் கேட்டால் அவ்வளவாய் யாருக்கும் தெரியவில்லை. “ஆட்டோ சாமி” என்று கேட்டால் சட்டென வீட்டைக் காட்டுகிறார்கள். 64 வயதை தொடும் சுதர்சன் ஓர் ஆச்சார பிராமணர். 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறார்.

சீர்காழி அருகிலுள்ள கீழச்சாலை கிராமம் சுதர்சனுக்கு சொந்த ஊர். ஒரு காலத்தில் எட்டு ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர்.

உடன் பிறந்த தங்கைகளைத் திருமணம் முடித்துக் கொடுப்பதற்காக அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்றவருக்கு கடைசியாகக் கையில் மிஞ்சியது முப்பதாயிரம் ரூபாய். அதை வைத்து ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தவர், ரொம்ப யோசிக்காமல் ஒரு ஆட்டோவை வாங்கி நிறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in