ஒற்றை ஆளாய் சாதித்த உழவன் மகள்

ஒற்றை ஆளாய் சாதித்த உழவன் மகள்

கரு.முத்து

அரசியல் அக்கப்போர்கள் அனுதினம் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில், சத்தமின்றி ஒரு சாதனைக்குச் சொந்தக்காரியாகி இருக்கிறார் ஒரு கல்லூரி மாணவி. அதுவும், பலரும் விலகிச் செல்லும் விவசாயத் துறையில்!

அந்த மாணவி ஒரு ஏக்கர் நிலத்தில் இவர் ஒரே ஆளாக நடவு நட்டு முடித்த அந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் ஒரு ஓரமாகக் காணக்கிடைத்தது. இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து முடிக்க வேண்டிய சவால் மிக்க பணியை, தனி ஒருத்தியாய் செய்து முடித்திருக்கும் ராஜலெட்சுமியைச் சந்திக்க, அவரது சொந்த ஊரான அக்கரைவட்டம்  சென்றிருந்தேன்.

தஞ்சை மாவட்டத்தின் தெற்குக் கடைக்கோடியில் கறம்பக்குடிக்கு அருகேயிருக்கிறது அக்கரைவட்டம் கிராமம். ஒரு காலத்தில் பொன் விளையும் பூமியாக இருந்த பகுதி இது. இன்றைக்கு நிலத்தடி நீரை நம்பி இடையறாமல் விவசாயம் நடந்துவருகிறது. ஆழ்துளைக் கிணறு போட வசதியில்லாவர்களுக்கு அக்கம்பக்கத்து வயல்காரர்கள் தண்ணீர் கொடுத்து உதவும் மனிதநேயம் இங்கு இன்னமும் தழைத்திருக்கிறது. அப்படி, அருகிலுள்ளவர்களிடம் தண்ணீர் பெற்று தனது ஒரு ஏக்கர் வயலை சாகுபடி செய்யும் கருப்பையா - காந்திமதி தம்பதியின் நான்காவது மகள்தான் ராஜலெட்சுமி. தனது மூன்று அக்காக்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட, தம்பி கல்லூரிப் படிப்பைத் தொடர, ஒரத்தநாட்டில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதம் படிக்கிறார் ராஜலெட்சுமி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in