இது புண்ணியமெல்லாம் இல்லீங்க... கடமை!- தாகம் தீர்க்கும் தண்ணீர் வள்ளல்

இது புண்ணியமெல்லாம் இல்லீங்க... கடமை!- தாகம் தீர்க்கும் தண்ணீர் வள்ளல்

கரு.முத்து

வெயில் வாட்டுகிறது. நாகை மாவட்டம் பூம்புகார் அருகே திருவெண்காட்டில் உள்ள அந்த வீட்டைக் கடந்து செல்லும் வாகனங்கள், சில நிமிடங்கள் அங்கு நிற்கின்றன. வீட்டின் வாயிற்சுவரோரம் போடப்பட்டிருக்கும் சிறிய ஷீட் பந்தலுக்குள் கையில் காலி பாட்டிலுடன் நுழைகிறார்கள் ஓட்டுநர்கள். திரும்பி வரும் போது பாட்டில்களில் நிரம்பியிருக்கிறது நீர். சிறு வணிகர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என்று அத்தனை பேரின் தாகத்தையும் தீர்த்துவைக்கிறது அந்த வீடு. அங்கு கிடைப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் என்பதுதான் கூடுதல் விசேஷம்.

“தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுக்குறது புண்ணியம்னு சொல்லுவாங்க. புண்ணியமெல்லாம் பெரிய வார்த்தைங்க... இது என்னோட கடமை. அவ்ளோதான்” என்கிறார் அந்த வீட்டின் சொந்தக்காரரான காசிராமன்.

 நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநில துணைத் தலைவரான காசிராமன்,நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் சீடரும்கூட. சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்குவதற்காக, வீட்டிலேயே சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் நிலையத்தை வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in