இதைக்கூட செய்யலைன்னா எப்படி பாஸ்?- கலக்கும் ‘கன்னியாகுமரி ஜவான்கள்’

இதைக்கூட செய்யலைன்னா எப்படி பாஸ்?- கலக்கும் ‘கன்னியாகுமரி ஜவான்கள்’

என்.சுவாமிநாதன்

சுருண்டுபோகவைக்கும் அசுர வெயிலுக்குச் சவால் விடும் வகையில் குளுமை காட்டுகின்றன குமரி மாவட்டத்தின் பேருந்து நிலையங்கள். எங்கும் பசுமை; நிழல் தரும் மரங்கள் என்று ஜொலிக்கின்றன பேருந்து நிறுத்தங்கள். ‘விளம்பரம் செய்யாதீர்… மீறுபவர்கள் ராணுவ வீரர்களை அவமதிப்பவர்கள் ஆவர்’ என்று எச்சரிக்கும் நோட்டீஸ்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் அரசியல், சினிமா போஸ்டர்கள் ஒட்டுபவர்களைப் பம்மியபடி பின்வாங்கச் செய்கின்றன. எல்லாவற்றிலும் ஒரு ராணுவ ஒழுங்கு, மிடுக்கு!

ஆம்! இதைச் சாத்தியமாக்கியவர்கள் சாட்சாத் ராணுவ வீரர்களேதான். என்ன மாயம் இது என்று விசாரித்தால், “தாய்நாட்டுக்காக எவ்வளவோ தியாகம் பண்றோம். தாய் மண்ணுக்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி பாஸ்?” என்று புஜபலம் காட்டுகிறார்கள் ராணுவ ஜவான்கள். அத்தனை பேரும் குமரி மாவட்டத்துக்காரர்கள். எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள், அண்மையில் ஓய்வுபெற்றவர்கள் ஆகியோர் இணைந்து ‘கன்னியாகுமரி ஜவான்கள்’ எனும் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்டு அந்த ஜவான்களைச் சந்திக்கப் புறப்பட்டேன்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தைத் தூய்மை செய்யும் பணியில் இருந்த அவர்களைச் சந்தித்து “இப்படி ஒரு யோசனை எப்படி வந்துச்சு?” என்று கேட்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in