தமிழ் ரெடி... தமிழ்த் தம்பிகள் ரெடியா?

தமிழ் ரெடி... தமிழ்த்  தம்பிகள் ரெடியா?

கே.கே.மகேஷ்

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘தமிழ்க் கணிமை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த துரைப்பாண்டி. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? 2007-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இதுவரை இந்த விருதைப் பெற்ற அத்தனை பேரும் புலம்பெயர் தமிழர்கள், அறிவியல் அல்லது கணினியில் பெரிய படிப்பு படித்தவர்கள். ஆனால், துரைப்பாண்டியோ தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல... பதினோறாம் வகுப்பில் பள்ளிப்படிப்பைத் துறந்தவர்!

எப்படி இது சாத்தியம்? பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பிறகு, 1988-ல் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஒரு மையத்துக்குப் போனார் துரைப்பாண்டி. ``என்ன இங்கே தட்டினால் இங்கிலீஷ் மட்டும் வருது? ஏன் தமிழ் வரலை?'' என்று அப்பாவியாக அவர் கேட்க, ``முதல்ல கம்ப்யூட்டர்னா என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் இப்படியெல்லாம் பேசலாம்'' என்று முகத்தில் அறைவது போல பதில் சொன்னார் கணினி ஆசிரியர். ``தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியதுதானே?'' என்று மனதிற்குள் நினைத்தபடி, தனது கேள்விக்குப் பதில் தேடி கணினி தொடர்பான புத்தகங்களை எல்லாம் சுயமாகப் படிக்கத் தொடங்கினார் துரைப்பாண்டி.

அப்போதுதான், எப்படி கீபோர்டு வழியாக உள்ளிடுவதை கணினி புரிந்துகொண்டு, திரையில் காட்டுகிறது என்பதை அறிந்துகொண்டார். கம்ப்யூட்டரைக் கண்டுபிடிச்சது வெள்ளைக்காரனா இருந்தாலும் அதற்கென்று ஒரு தாய்மொழி கிடையாது. நாம் அதற்கு செயற்கை அறிவைக்கொடுத்து புரிந்துகொள்ளச் செய்தால், எந்த மொழியையும் அது புரிந்துகொள்ளும் என்ற அடிப்படையை அறிந்துகொண்டார். அதுபற்றி அந்த ஆசிரியரிடமே விளக்கமாகச் சொல்லிவிட்டு, “இனிமேல் உங்ககிட்ட படிக்க நான் தயாரில்ல. சொந்தமா படிச்சிக்கிறேன்'' என்று வெளியேறியவர், கணினியில் சில டிப்ளமோக்களையும், அஞ்சல் வழியில் எம்ஏ வணிகவியல் வரைக்கும் படித்தார். அத்துடன் 1988லேயே தமிழ் எழுத்துருக்களை உருவாக்கும் பணியில் இறங்கினார். அதில் இவருக்கு வெற்றி கிடைத்தாலும் கூட, அதை அங்கீகரிக்க அரசு மற்றும் கணினித்துறை சார்ந்த நிபுணர்களுக்கு மனமில்லை. சம்பந்தமேயில்லாத கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டு இவரைத் திணறடிப்பதும், அவமானப்படுத்தி அனுப்புவதுமே வேலையாக இருந்தார்கள் அவர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in