ஆதலினால் காதல் செய்வீர்- காதலர்களுக்காக ஒரு அறக்கட்டளை!

ஆதலினால் காதல் செய்வீர்- காதலர்களுக்காக ஒரு அறக்கட்டளை!

எம்.கபிலன்

கருத்தொருமித்த காதலர்கள் கரம்பிடிக்க உதவிசெய்யும் ஆத்மார்த்த நண்பர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காதல் ஜோடிகளுக்கு தஞ்சமளிப்பதற்காகவே ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதற்காக ஒரு காப்பகத்தையும் கட்டிவைத்திருக்கிறார் சாதிமறுப்பு போராளியான திருப்பூர் சே. குணசேகர்.

‘ஆதலினால் காதல் செய்வீர்’ - இதுதான் காதலர்களைச் சேர்த்துவைக்க குணசேகர் தொடங்கியிருக்கும் அறக்கட்டளை. கண்ணீரின் கதையாய் முடிந்த திவ்யா – இளவரசன் காதலைப் போலஇன்னொரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காகவே முன்பு, ‘ஆணவக்கொலை தடுப்பு படை’ என்ற அமைப்பை உருவாக்கினார் குணசேகர். தமிழகம்முழுவதும் கிளை விட்டிருக்கும் இந்த  அமைப்பு,காதல், கலப்பு மணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் நிற்கிறது. இதற்கென இயங்கும் இணையத்தில், காதல் திருமணத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் தன்னார்வலர்களின் அலைபேசி எண்கள் பளிச்சிடுகின்றன.

இதற்கு முன்பு, ஆணவக் கொலை தடுப்புப் படையினரால் அனுப்பிவைக்கப்படும் காதல் ஜோடிகளுக்கு திருப்பூரில் தனது வீட்டிலேயே அடைக்கலம் தந்தார் குணசேகர். அவர்களைப் பற்றிய உண்மையான விவரங்களை முழுமையாக விசாரித்து சந்தேகம் தெளிந்தபின் அவர்களுக்குத் தனது பொறுப்பில் சுயமரியாதை திருமணத்தையும் நடத்தி வைத்தார். அத்தோடு விடவில்லை... பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்துப் பெற்றோரை வரவைத்து போலீஸ் மூலமாக சமரசம் பேசி காதல் தம்பதியை அவர்களது உறவுகளோடு சேர்த்தும் வைத்தார் குணசேகர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in