திறமையால் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கணும்!- சாதிக்க வந்திருக்கும் சாக்‌ஷி ஹரேந்திரன்

திறமையால் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கணும்!- சாதிக்க வந்திருக்கும் சாக்‌ஷி ஹரேந்திரன்

உ.சந்தானலெட்சுமி

“மேடம்... இன்னிக்கி ஈவினிங் ஸ்டுடியோ வர்றீங்களா? சூப்பர் சர்ப்ரைஸ் இருக்கு!” என்ற தொலைபேசித் தகவலுக்குத் தலையசைத்து, வெறிச்சோடியிருந்த சென்னை சாலைகளில் பயணித்து வேலப்பன் சாவடியில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தேன்.  ‘செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்...’ என்று கண்கள் கூசும் கலர் கலர் வெளிச்சங்களுக்கு நடுவே மேடையில் ஒய்யாரமாய் ஆண், பெண் என இருவர் குரல்களிலுமே பாடியும், ஆடியும் அசத்திக்கொண்டிருந்தார் சாக்‌ஷி ஹரேந்திரன்.

மக்களவைத் தேர்தல் திருவிழாவையும் தாண்டி இணைய உலகை கடந்த இரண்டு மாதங்களாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் சாக்‌ஷி, சிங்கப்பூர் வாழ் திருநங்கை.

மேடையை விட்டு கீழிறங்கியவரிடம், பேச ஆரம்பித்தேன். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர்தான். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மூன்று அக்காக்கள்னு அன்பாலான குடும்பம் என்னுடையது. அப்பா மலையாளி, அம்மா தமிழ். அதனால், சின்ன வயசிலிருந்தே தமிழ் மொழி மேல எனக்கு தீராத காதல். சிங்கப்பூரில் நாங்கள் வசித்த இடமும் தமிழர்கள் அதிகமா இருந்த பகுதி. தமிழ்ல ஆர்வம் இருந்தாலும், நான் பேசும் தமிழை அங்குள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள். அந்த கிண்டலும் கேலியும்தான் இந்த அளவுக்கு முன்னேற எனக்கு உந்துதலா அமைஞ்சது” என்ற சாக்‌ஷியின் தமிழ் உச்சரிப்பு அத்தனை தெளிவு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in