கொஞ்சம் பிழைப்பு... நிறைய எழுத்து!

கொஞ்சம் பிழைப்பு... நிறைய எழுத்து!

எம்.கபிலன்

மாமன்னன் ராஜேந்திர சோழனின் கனவு நகரமான கங்கை கொண்ட சோழபுரத்தின் வடக்கு வீதியில் இருக்கிறது வினையனின் வீடு. அறைகள் கூட இல்லாத அந்தக் கூரை வீட்டினுள், கூலிக்கு வாங்கி வந்த பச்சைக் கடலை பரந்து படுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறது. பக்கத்திலேயே, கொஞ்சம் ஈரக் கடலைச் செடிகள் - பசியோடு வரும் ஆட்டுக்காக! இன்னொரு பக்கம் வினையனின் மகனும் மகளும் டீயில் பிஸ்கட்டை நனைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். “உள்ள வாங்க சார்...” என்று நம்மை அழைக்கிறார் வினையன்.

வீட்டுக்குள் அவரது மனைவி ராஜலெட்சுமி கடுகு, மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகைப்பொருட்களை பாக்கெட் போட்டுக்கொண்டிருக்கிறார். அதையெல்லாம் சின்னச் சின்ன மளிகைக்கடைகளுக்குக் கொண்டுபோய் போட்டுத்தான் கையில் நாலு காசு பார்க்கிறார் வினையன். அந்த வீட்டிலேயே சின்னதாய் ஒரு மளிகைக் கடையும் இருக்கிறது.

காலை நேரம் என்பதால் மளிகைக்கடை பரபரப்பாக இருந்தது. கடைக்குள் பிஸ்கட்டுகள், பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிறு மர அடுக்கில் புத்தகங்களும் பிதுங்கி வழிகின்றன. வியாபாரத்திலிருந்த வினையனிடம் “கேஸு சிலிண்டரு பதிவாவே மாட்டுது... என்னான்னு கொஞ்சம் பாரு விஜி” என்று ஒரு பெண் உரிமையோடு கேட்கிறார். வியாபாரத்துடன் மக்கள் சேவையும் சேர்த்து செய்யும் விஜயகுமார், இலக்கிய வட்டத்தில் வினையன் என்றறியப்படுபவர். சிற்றிலக்கிய பத்திரிகைகளிலும் இலக்கிய வட்டாரத்திலும் வினையனின் எழுத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவை. வட்டார மொழியின் வளமையை முழுமையாகக் கை கொண்டிருப்பவை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in