பலகாரக் கூடத்தில் நடைபழகும் எழுத்து!- மற்றவர்களுக்கு வழிகாட்டும் மணிகண்டன்

பலகாரக் கூடத்தில் நடைபழகும் எழுத்து!- மற்றவர்களுக்கு வழிகாட்டும் மணிகண்டன்

என்.பாரதி

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட  வீட்டை ஒட்டி இருக்கிறது அந்தப் பலகாரக் கூடம். உள்ளே தனது குடும்ப சகிதம் இருந்து மிக்சர், காரச்சேவு, பூந்தி என விதவிதமான பலகாரங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார் மணிகண்டன். அதற்கு நடுவில்தான் அவ்வப்போது அவரது எழுத்தும் நடை பழகுகிறது!

குமரி மாவட்டம் திருவிடைக்கோடு பகுதியில் இருக்கிறது மணிகண்டனின் வீடு. அப்பா விவசாயி என்பதால் மகன் மணிகண்டனும் விவசாயம் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், 12 -ம் வகுப்பில் கரை சேர்வதே கஷ்டமாகிப் போனதால் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, வயிற்றுப் பாட்டுக்காக இப்போது பலகாரக் கடைக்குள் வந்துவிட்டார்.

ஆர்டர் கொடுத்த இடங்களுக்குப் பலகாரங்களை அனுப்புவதற்காக பேக்கிங் செய்துகொண்டிருந்த மணிகண்டனைச் சந்தித்தேன். “எங்க குடும்பத்திலயே முதலில் பத்தாம் கிளாஸ் தாண்டுனது நான்தான். ப்ளஸ் டு ஃபெயிலானதும் படிச்சது போதும்னு சென்னைக்கு வேலைக்குப் போனேன். அங்க ஒரு பேக்கரியில் பலகாரம் போடும் வேலை கிடைச்சுது. 7 வருசம் அந்த பேக்கரியில் மாஸ்டரா இருந்தேன். ஓரளவு சம்பளம் கிடைச்சுது. அந்தக் காசில் தங்கச்சியை எம்.காம்., வரை படிக்க வச்சேன். இப்போ என்னோட தங்கச்சி நரசூஸ் காபி கம்பெனியில மேனேஜரா இருக்காங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in