பிடித்தவை 10- கல்பனா ரத்தன்

பிடித்தவை 10- கல்பனா ரத்தன்

சிவகாசியில் வசிக்கும் கல்பனாரத்தன் ஆங்கில ஆசிரியை. தமிழ் மீதும் காதல் கொண்ட தீவிர வாசிப்பாளர். சமூக ஆர்வலரும்கூட! கவிதையும், சிறுகதையும் இவரது படைப்புலகம். இவரது ஒருபக்க சிறுகதைகள், கவிதைகள் பல வாரஇதழ்களிலும் வெளிவந்து பரிசுகளும் வென்றுள்ளன.

‘கந்தகப்பூக்கள்’ என்னும் இலக்கிய அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு, ‘மனம் உதிரும் காலம்’ இவரின் கவிதைகள் குழந்தைகள் உலகை பேசுபவை. குழந்தைகளுடனான அனுபவங்களைத் தொகுத்து படைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவரின் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை : கம்பீரம், வெளிப்படையான உள்ளம், பாசாங்கற்ற பேச்சு, விடுதலை வேட்கை, ரசிப்பதில் ஒன்றிக் கலத்தல்... என அத்தனையிலும் ஈர்க்கும் பாரதியார். அவரது நினைவு நாளில்தான் நானும் பிறந்தேன்.

கதை: வண்ணதாசனின் ‘சின்னு முதல் சின்னு வரை’ மிகவும் பிடித்த கதை. இவான் துர்கேனிவ், ஆந்தோன் செகாவ், மௌனி, லா.சா.ரா, சூடாமணி ஆகியோரின் கதைகளும் பிடிக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in