யோகி ஆதித்யநாத், கங்கனா ரனாவத், லாலு பிரசாத் யாதவ்... 7-ம் கட்ட தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

யோகி ஆதித்யநாத், கங்கனா ரனாவத், லாலு பிரசாத் யாதவ்... 7-ம் கட்ட தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

7வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தேர்தலில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், நடிகை கங்கனா ரனாவத், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாக்களித்தனர்.

வாக்களித்தப் பின் மையிடப்பட்ட விரலை காண்பிக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

பாலிவுட் நடிகையும், இமாச்சல பிரதேச மாநிலம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் வாக்களித்தார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்களித்தார்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலுபிரசாத் யாதவ், தனது மனைவி, மகளுடன் வாக்களித்தார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தனது மனைவியுடன் வாக்களித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாக்களித்தார்.

மத்திய அமைச்சரும், ஹமிர்பூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அனுராக் தாக்கூர் இன்றைய தேர்தலில் வாக்களித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in