தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை... இன்றும், நாளையும் கனமழை பெய்யும்!

மழை
மழை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்தமிழகப் பகுதிகளில் வணிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னனுடன் மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

மேலும் இன்று (ஜூன் 1) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டப் பகுதிகளிலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல ஜூன் 2-ம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழை
கனமழை

இந்த நிலையில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in