தனியார் நிறுவன ஊழியரை கரண்டியால் தாக்கிய பெண்!

தனியார் நிறுவன ஊழியரை கரண்டியால் தாக்கிய பெண்!

சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கவில்லை எனக்கூறி தனியார் நிறுவன ஊழியரை இரும்பு கரண்டியால் சரமாரியாக தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த ஆதிமூலம் (46) என்பவர் கொடுங்கையூர் அருகே சோப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இரவு 10 மணி அளவில், எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சாப்பிடச் சென்றார்.

அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு பணம் கொடுத்துள்ளார். பின்னர் ஆதிமூலம் அங்கிருந்து கிளம்பும் போது டிபன் கடை நடத்தி வரும் விஜயகுமாரி (51) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் (23) என்பவருடன் சென்று ஆதிமூலத்திடம் பணம் கேட்டுள்ளார்.

சாப்பிட்ட டிபனுக்கு பணம் தரவில்லை, அதனால் பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தாம் பணம் கொடுத்து விட்டதாக ஆதிமூலம் கூறியதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து விஜயகுமாரி கடையில் இருந்த இரும்பு கரண்டியை எடுத்து ஆதிமூலம் தலையில் சரமாரியாக தாக்கினார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எம்.கே.பி. நகர் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரியை கைது செய்தனர். அவருடன் இருந்த கவுதம் என்பவரை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in