இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்!

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான பாலக்கோம்பையை சேர்ந்த பெத்தையன் (74) என்பவரின் மனைவி கருப்பாயம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருப்பாயம்மாள் நடந்து சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, அதே தினத்தன்று மாலை பெத்தையன் வயது முதிர்வு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர்கள், அவரது மனைவியான கருப்பாயம்மாளிடம் தெரிவித்தனர். கணவர் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கருப்பாயம்மாளும் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து பெத்தையன், கருப்பாயம்மாள் ஆகியோரின் உடல்கள் பாலக்கோம்பை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. வயதான தம்பதி ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in