ஆந்திரா, ஒடிசாவில் வெற்றி யாருக்கு? ஆளும் கட்சிகள் கரை சேருமா?

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெறப் போகும் கட்சிகள் எது என்பது மிகப்பெரிய ஆவலை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதே போல் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 2ம் தேதி நடைபெற்றது. சிக்கிமில் ஆளும் கட்சியான எஸ்கேஎம் கட்சியும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜகவும் வெற்றி பெற்றிருந்தன.

பிரதமர் நரேந்திர மோடியுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்
பிரதமர் நரேந்திர மோடியுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்

இதையடுத்து இன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 175 தொகுதிகளை கொண்ட ஆந்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் கட்சி தணித்தும், பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி ஆகியவை தனியாகவும் தேர்தலை எதிர்கொண்டு உள்ளன. இதில் ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்குமா, அல்லது தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நவீன் பட்நாயக் விகே பாண்டியன்
நவீன் பட்நாயக் விகே பாண்டியன்

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் அந்த கட்சி களத்தில் இறங்கி இருப்பதால் வெற்றி வாய்ப்பு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதா எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதே போல் ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இங்கே பாரதிய ஜனதா கட்சி தனியாகவும், காங்கிரஸ் கட்சி தனியாகவும், தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இங்கும் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறுமா, அல்லது தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in