தமிழ்நாட்டில் தடம் பதிக்கப்போவது யார்; பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? - வெளியானது வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

ஸ்டாலின் இபிஎஸ் மோடி
ஸ்டாலின் இபிஎஸ் மோடி

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மிகப்பெருன்பான்மையான தொகுதிகளில் திமுகவே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன.

ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய மக்களவைத் தேர்தலின் இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடைபெறுகின்றன. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், இன்று மாலை முதல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின்படி, நியூஸ் 18 வெளியிட்டுள்ள கணிப்பின்படி தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 36-39 தொகுதிகளிலும், அதிமுக 0-2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1-3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம் நிறைவு கூட்டத்தில் ஸ்டாலின்
பிரச்சாரம் நிறைவு கூட்டத்தில் ஸ்டாலின்

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கணிப்பின்படி தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 33-37 தொகுதிகளிலும், அதிமுக 0-2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 2 - 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் மை இண்டியா வெளியிட்டுள்ள கணிப்பின்படி தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 36-39 தொகுதிகளிலும், அதிமுக 0-2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1-3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி வெளியிட்டுள்ள கணிப்பின்படி தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 37-39 தொகுதிகளிலும், அதிமுக 0 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 0-2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அண்ணாமலை
மோடி அண்ணாமலை

ஜன்கி பாத் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் இடிஜி வெளியிட்டுள்ள கணிப்பின்படி தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும், அதிமுக 0 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 16 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in