மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்!

டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. ’சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் இடையேயான லீக் சுற்று போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது.

பப்புவா நியூ கினியா அணி வீரர்கள்
பப்புவா நியூ கினியா அணி வீரர்கள்

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணியின் சிசி பவ் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். பிறவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது.

மேற்கிந்திய தீவுகள் - பப்புவா நியூ கினியா அணிகள்
மேற்கிந்திய தீவுகள் - பப்புவா நியூ கினியா அணிகள்

அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் ஜான்சன் சார்லஸ், ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் ரோஸ்டன் சேஸ் 42 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்களும், பிராண்டன் கிங் 34 ரன்களும் எடுத்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எட்டியது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரோஸ்டன் சேஸ் தேர்வு செய்யப்பட்டார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in