மீனவர்களின் நலன் காக்கவே முன்னுரிமை - முதல்வர் ஸ்டாலினின் கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!

மீனவர்களின் நலன் காக்கவே முன்னுரிமை - முதல்வர் ஸ்டாலினின் கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு இன்று பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நீங்கள் ஜூன் 19, 24 மற்றும் 25ம் தேதிகளில் எழுதிய கடிதங்கள் கிடைத்தது. ஜூன் 26ஆம் தேதியின் விவரங்களின்படி, 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தண்டனை பெற்று தண்டனை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கொழும்புவில் உள்ள இந்திய தூதரம், யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர் பிரச்னை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்’ என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in