அதிர்ச்சி... புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் மரணம்!

அதிர்ச்சி... புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் மரணம்!

ரஷ்யா அதிபர் புடினுக்கு எதிராக சில தினங்களுக்கு முன்பு கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழுவின் தலைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு ஒரு கூலிப்படை. உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குவது வழக்கம்.

இந்தக்குழு உலகம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாகவே செயல்படுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட போது வாக்னர் ஆயுதக் குழுவை ரஷ்யா பயன்படுத்திக் கொண்டது. இது ஒரு மூர்க்கமான ஆயுதக்குழு.

டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் ப்ரிகோஸின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணர் ஆகியோர் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.

அண்மையில் இந்தக்குழு ரஷ்ய அரசுக்கு எதிராக திரும்பியது. பல்வேறு இடங்களில் வாக்னர் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. உக்ரைன், ரஷ்யா போருக்கு இடையே வாக்னர் குழு ரஷ்யாவை தாக்கியது புடினுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென வாக்னர் குழு ரஷ்யா மீதான தாக்குதல் நிறுத்தியது. புடின் பிரச்சினையை பேசி சரி செய்திருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விமான விபத்தில் ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடக்கம் என ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in