மைதானத்தில் மட்டுமல்ல சமூக ஊடகத்திலும் கோலி தான் கில்லி... புதிய சாதனை செய்த இன்ஸ்டா பதிவு!

விராட் கோலி
விராட் கோலி

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படம் இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட பதிவாக மாறியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு தான் தற்போது பெரும் சாதனை படைத்துள்ளது. அதுவும் அதிகபட்ச லைக்குகளைப் பெறுவதன் மூலம், இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவாக மாறியுள்ளது.

கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி
கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி

இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், " ஒரு சிறந்த நாளைக் கனவு கண்டிருக்க முடியாது. கடவுள் பெரியவர், நன்றியுடன் தலை வணங்குகிறேன். இறுதியாக நாங்கள் வென்றோம்" என்று அந்த பதிவில் கூறியுள்ளார். இந்திய அணி வீரர் விராட் கோலி மைதானத்தில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த முறை சமூக ஊடக கணக்கிலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு தற்போது சாதனை படைத்துள்ளது. அதுவும் அதிகபட்ச லைக்குகளைப் பெறுவதன் மூலம். தற்போது இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட பதிவாக மாறியுள்ளது. விராட் கோலி டி20 உலகக் கோப்பையைக் கொண்டாடும் புகைப்படம் உட்பட மொத்தம் 4 படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் ஏற்கெனவே 18 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 1 கோடியே 83 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட இன்ஸ்டாகிராம் இடுகையாக இது மாறியுள்ளது.

விராட் கோலி பகிர்ந்த இந்த பதிவு ஒரு நாளில் 18,303,057 லைக்குகளைப் பெற்றது மற்றும் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பதிவை முன்னாள் யுஎஃப்சி சாம்பியன் கோனார் மெக்ரிகோர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான வினிசியஸ் ஜூனியர், ஜூட் பெல்லிங்ஹாம், நடிகர் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் விரும்பியுள்ளனர்.

சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி தம்பதி
சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி தம்பதி

கோலியின் இந்த சாதனையை இதற்கு முன்பு பாலிவுட் நட்சத்திர ஜோடி சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி வசம் இருந்தது‘ இந்த ஜோடி பகிர்ந்துள்ள திருமண புகைப்படத்தை 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர். தற்போது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in