காதலியை ரகசியமாக சந்திக்க வந்த காதலன்... சுற்றி வளைத்த கிராமத்தினர்: அடுத்து நடந்த டுவிஸ்ட்!

பூஜா குமாரி. சந்தன் குமார் தம்பதி
பூஜா குமாரி. சந்தன் குமார் தம்பதி

காதலியை ரகசியமாக சந்திக்க வந்த காதலனை கிராம மக்கள் பிடித்து கோயிலில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாங்கே கஜார் காவல் நிலையத்திற்குட்பட்ட கஜூரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா குமாரி. ரோஷன்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.அவ்வப்போது இருவரும் ரகசியமாக சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

காதல்
காதல்

இந்த நிலையில், தனது காதலி பூஜா குமாரியை சந்திக்க கயா மாவட்டத்தில் உள்ள பாங்கே பஜாருக்கு சந்தன் குமார் நேற்று வந்தார். தனது காதலி வரச்சொன்னதால் ஆர்வமுடன் சந்தன் குமார் சென்றிருந்தார். அங்கு வந்த பூஜா குமாரி, தனது காதலன் சந்தன் குமாருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிராம மக்கள், காதலியை ரகசியமாக சந்திக்க வந்த சந்தன் குமாரை பிடித்தனர்.

அப்போது பூஜா குமாரியை இரண்டு வருடங்களாக காதலிப்பதாக சந்தன் குமார் கூறினார். அத்துடன் அவரை சந்திக்க வந்ததாகவும் கூறினார். அப்படியென்றால், பூஜா குமாரியை திருமணம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் சந்தன் குமாரிடம் வலியுறுத்தினர்.

திருமணம்
திருமணம்

அத்துடன் பூஜா குமாரியையும், சந்தன் குமாரையும் கிராமத்தின் அருகே உள்ள பாங்கேதம் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணத்தைச் செய்து வைத்தனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in