இடைத்தேர்தல் பரபரப்பு... இன்று மாலை வெளியாகிறது விக்ரவாண்டி வேட்பாளர் பட்டியல்!

விக்ரவாண்டி இடைத்தேர்தல்
விக்ரவாண்டி இடைத்தேர்தல்

விக்ரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்ரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார்.

விக்ரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி
விக்ரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி

இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியிட விரும்புவோர் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையில், வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 56 வேட்பாளர்களின் சார்பில் 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது நேற்று முன்தினம் நடந்த பரிசீலனையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

இந்த நிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாராவது திருப்பப் பெற விரும்பினால் இன்று மாலை அவகாசம் உள்ளது. அதன் பின் இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. விக்ரவாண்டியில் நடைபெறும் இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in