விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஸ்ரீமதி தாயாரின் வேட்புமனு உட்பட 35 மனுக்கள் நிராகரிப்பு!

ஸ்ரீமதி தாயார்
ஸ்ரீமதி தாயார்
Updated on
2 min read

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடை பெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது.

இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோர் உட்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மேலும் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அதன்படி, கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in