விஜயின் நீட் எதிர்ப்பு நிலைப்பாடு: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் வரவேற்பு

தவெக தலைவர் நடிகர் விஜய்
தவெக தலைவர் நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் தேர்வு தேவையில்லை என கூறிய கருத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விருது, ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேசுகையில், "நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

அத்தேர்வு கிராமப்புற ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவை தகர்க்கிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

முதல் கட்ட விருது வழங்கும் விழாவில் போதைப் பொருள் புழக்கம் ஒரு பெற்றோராக தனக்கு அச்சமளிக்கிறது என நடிகர் விஜய் தெரிவித்த கருத்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிரானது என அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் விஜயை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில் இன்றை விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டது, நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு, மாநில அரசுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என விஜய் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி, ஜெயக்குமார், திருமாவளவன், செல்வப்பெருந்தகை
ஆர்.எஸ்.பாரதி, ஜெயக்குமார், திருமாவளவன், செல்வப்பெருந்தகை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பாஜக அரசுக்கு எதிரான விஜயின் அரசியல் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளனர். அதேவேளையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது வருந்தத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in