‘விடுதலை’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு திடீரென பாதியில் நின்று போனது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிப்பதாகவும் கூறப்படுகிறது
இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட இருந்தன.
இந்நிலையில், சிறுமலையில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்ப்பதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகே படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.