உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் ஆட்டம்... கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அமெரிக்கா!

அமெரிக்கா அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ்
அமெரிக்கா அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ்

டி20 உலகப்கோப்பை தொடரில் முதல் போட்டியில் கனடாவிற்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

20 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6 மணியளவில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா, கனடா அணிகள் பங்கேற்ற, தொடரின் முதல் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அமெரிக்கா - கனடா டி20 கிரிக்கெட் அணிகள்
அமெரிக்கா - கனடா டி20 கிரிக்கெட் அணிகள்

இதையடுத்து களமிறங்கிய கனடா அணியில், ஆரோன் ஜான்சன் 23 ரன்களும், நவ்நீத் தலிவல் 61 ரன்களும், நிக்கோலஸ் கிரிட்டன் 51 ரன்களும், ஸ்ரேயாஸ் மோவா 32 ரன்களும் எடுத்து ஆட்டமிருந்தனர். இதை எடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது.

அமெரிக்கா தரப்பில் அலி கான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் அமெரிக்கா அணி களமிறங்கியது.

அமெரிக்கா அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ்
அமெரிக்கா அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ்

தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் டைலர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த கேப்டன் மொனாங் பட்டேல் 16 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கவுஸ் 65 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்த போதும், மறுமுனையில் ஜோன்ஸ் நிலைத்து நின்று அடி ரன்களைச் சேகரித்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 40 பந்துகளில் 4 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்களை குவித்தார். இதன் மூலம் 17.4 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஆரோன் ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in