அவதூறு வழக்கு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக உ.பி. நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் வரும் ஜூலை 2ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அவதூறு வழக்கு
அவதூறு வழக்கு

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே என்பவர் கூறுகையில், "ராம் பிரதாப் என்பவர் இந்த வழக்கில் தன்னை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் ராம் பிரதாப் பாதிக்கப்பட்டவர் இல்லை. இந்த விஷயத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லாவும், புகார்தாரரின் மனுவை எதிர்த்தார். எனினும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், வரும் ஜூலை 2ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கூறி உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி 20ம் தேதி அன்று அமேதியில் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு இடையே, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in