இதுதான் சமூக நீதி ஆட்சியா முதல்வரே? - மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

எல்.முருகன்
எல்.முருகன்
Updated on
2 min read

பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத போலி சமூக நீதி அரசைத்தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா என்று தமிழக முதல்வருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு அருகே பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சொர்ணா. இவர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார். தாயை மீட்ட அவரது மகள் வளர்மதி, அவரை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, நடக்க இயலாமல் இருந்த மூதாட்டி சொர்ணாவை, மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல, மருத்துவமனை ஊழியர்கள் தரப்பிலிருந்து ஸ்ட்ரெச்சர் வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியை மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல இயலாமல் வளர்மதி தவித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரெச்சர் இல்லாததால் தாயை தூக்கிச் சென்ற மகள்
ஸ்ரெச்சர் இல்லாததால் தாயை தூக்கிச் சென்ற மகள்

இதையடுத்து வேறு வழியின்றி, வளர்மதி தனது தாயை தனி ஆளாக, தூக்கிச் சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார். மூதாட்டியை அவரது மகள் மருத்துவமனை வளாகத்துக்குள் தூக்கிச் சென்ற சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது எக்ஸ் தளத்தில் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

அதில், "சந்தி சிரிக்கின்ற போலி திராவிட மாடல் அரசு. அன்றாடம் தங்களுடைய குடும்பத்தை காக்க அயராது உழைக்கும் பாமர மக்களுக்கு, அரசு மருத்துவமனைகளே தெய்வங்களாக இருந்து வருகின்றன. அப்படி இருக்கையில், இப்படியாக பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ‘போலி சமூக நீதி’ அரசாங்கத்தை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே..?" என்று எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in