43 வயதில் உகாண்டா வீரர் அபார சாதனை... பப்புவா நியூ கினியாவிற்கு எதிரான போட்டியில் அசத்தல் பந்துவீச்சு

உகாண்டா வீரர் பிராங்க் சுபுகா அபார சாதனை
உகாண்டா வீரர் பிராங்க் சுபுகா அபார சாதனை

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த பவுலிங் என்ற சாதனையை உகாண்டா அணியைச் சேர்ந்த 43 வயதான பிராங்க் சுபுகா என்ற வீரர் படைத்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரின் ’சி’ பிரிவு லீக் சுற்று போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் உகாண்டா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணியில், அதிகபட்சமாக ஹிரி ஹிரி 15 ரன்கள் எடுத்தார். சியாக்கா மற்றும் டோரிகா ஆகியோர் தலா 12 ரன்கள் எடுத்தனர். பிற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களிலும், ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.

பப்புவா நியூ கினியா வீரர்கள்
பப்புவா நியூ கினியா வீரர்கள்

இதனால் 19.1 முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டும் எடுத்தது. உகாண்டா சார்பில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிராங்க் சுபுகா,4 ஓவர்கள் வீசி 4 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய வீரர் என்ற சாதனையை பிராங்க் படைத்தார். அவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது. உகாண்டா தரப்பில் பிராங்க், ஜூமா மியாகி, காஸ்மாஸ், அல்பேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

உகாண்டா அணி வீரர்கள்
உகாண்டா அணி வீரர்கள்

78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி களம் இறங்கியது. இந்த அணியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆனால் ரியாத் அலி ஷா பொறுப்புணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்த நிலையில், அந்த அணி 18.2 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உகாண்டா அணி வீரர்கள்
உகாண்டா அணி வீரர்கள்

இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டா அணி, பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தியது. பப்புவா நியூ கினியா அணியில், அலி நாவ், நார்மன் வனுவா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in