பொய் பிம்பம் உடைந்தது... பாஜக தோற்றது: உத்தவ் தாக்கரே பரபரப்பு பேட்டி!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி என்ற பொய்யான பிம்பத்தை அக்கட்சியினா் உருவாக்கி வைத்திருந்தனா். ஆனால், பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது இந்த மக்களவைத் தோ்தலில் உறுதியாகிவிட்டது” என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்த தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்றது.

மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024

இந்த தேர்தலில் 400 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகள் பரவலாக வெளியாகின. அத்துடன் 70 தொகுதிகளுக்குள் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்புகளில் ஆரூடம் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது . காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றன. நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி என்ற பொய்யான பிம்பத்தை அக்கட்சியினா் உருவாக்கி வைத்திருந்தனா். ஆனால், அக்கட்சியை தோற்கடிக்க முடியும் என்பது இந்த மக்களவைத் தோ்தலில் உறுதியாகிவிட்டது” என்றாா். மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் அதிகபட்சமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in