திடீரென தண்டவாளத்தில் விழுந்த பெட்டிகள்... சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து!

திடீரென தண்டவாளத்தில் விழுந்த பெட்டிகள்... சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து!

பஞ்சாப்பில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதிய விபத்தில் இரண்டு ரயில்களும் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் அருகில் உள்ள மாதோப்பூர் பகுதியில் இன்று காலை சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் மற்றொரு சரக்கு ரயில் வந்ததாக கூறப்படுகிறது. இறுதி நேரத்தில் முன்னால் நிற்கும் ரயிலைக் கண்ட லோகோ பைலட் பிரேக்குகளை பயன்படுத்திய போதும், முன்னால் நின்ற ரயிலின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு சரக்கு ரயில்களின் லோகோ பைலட்டுகளும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரயில்களின் பெட்டிகளும் தாண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள ரயில்வே துறை அதிகாரிகள், படுகாயம் அடைந்த லோகோ பைலட்டுகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்துள்ள விபத்திற்கு உள்ளான ரயில்களின் பெட்டிகளை அகற்றவும், ரயில் போக்குவரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் எப்படி இந்த 2 ரயில்களும் வந்தன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in