அறுந்து விழுந்த மின்வயர்... பிரேக் போட்ட ரயில் ஓட்டுநர்… அதிர்ச்சியில் 2 பயணிகள் பலி!

அறுந்து விழுந்த மின்வயர்... பிரேக் போட்ட ரயில் ஓட்டுநர்… அதிர்ச்சியில் 2 பயணிகள் பலி!

ஜார்கண்ட் மாநிலம் கொடெர்மா மாவட்டத்தில் ரயில் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், அதிர்ச்சியில் பயணிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

புரி – டெல்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது, பிரசாபாத் அருகே கோமோ – கொடெர்மா ரயில் நிலையம் இடையே விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் சென்று கொண்டிருந்த போது எதிரே மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இதையடுத்து, ரயில் ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பயணிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ரயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதனால் சுமார் 4 மணி நேரம் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தன்பாத் ரயில்வே மண்டல மேலாளர் கே.கே.சிங், நிகழ்விடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பெரும் அசம்பாவிதத்தை தடுக்க ஓட்டுநர் பிரேக் போட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in