பகீர்... குப்பைத் தொட்டியில் நாய்க்குட்டிகளை வீசிய பெண்: வெளியான வீடியோவால் அதிரடி நடவடிக்கை!

குப்பைத் தொட்டியில் நாய்க்குட்டிகளை வீசிய பெண்.
குப்பைத் தொட்டியில் நாய்க்குட்டிகளை வீசிய பெண்.

குப்பை கொட்டும் தொட்டியில் உயிருடன் 2 நாய்க்குட்டிகளை வீசியதாக பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவைச் சேர்ந்த ஒரு பெண் இரக்கமின்றி இரண்டு நாய்க்குட்டிகளை சாலையோர குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குப்பைத் தொட்டி அருகே வைககப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், ஒரு பெண் கையில் நாய்க்குட்டியுடன் தெருவில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது, அதை அவள் குப்பைத் தொட்டியில் வீசிகிறாள். அவளைப் பின் தொடர்ந்து வந்த மற்றொரு நாய்க்குட்டியையும் குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் செல்கிறார். அவர் அருகே ஆண் எந்த சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறார். இச்சம்பவம் ஜூன் 2-ம் தேதி மாலை (உள்ளூர் நேரம்) நடந்ததாக கூறப்படுகிறது. குப்பைத் தொட்டியில் இருந்து அந்த நாய்க்குட்டிகளை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

இந்த வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த சமூக சேவை குழுவான St Landry Crime Stoppers என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த அதிர வைக்கும் காட்சிகளை ஆன்லைனில் பகிர்ந்த அவர்கள், வீடியோவில் காணப்படும் நபர்களை அடையாளம் காணுமாறு விலங்கு பிரியர்களையும் பொதுமக்களையும் வலியுறுத்தினர்.

தற்போது குப்பைத் தொட்டியில் நாய்க்குட்டிகளை வீசியவர்கள் யார் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜாஸ்மின் மவுண்டன் மற்றும் கெண்டல் டைலர் ஆகியோர் மீது விலங்குகள் துன்புறுத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செயினட் லேண்ட்ரி பாரிஷ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in