இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே பிரபல நடிகையின் சகோதரி படுகொலை!

இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே பிரபல நடிகையின் சகோதரி படுகொலை!

இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே தனது சகோதரி மற்றும் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்டதாக பிரபல நடிகை வேதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதே போல் எல்லை பகுதியில் புகுந்து மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த திடீர் தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் பிணைக்கைதிகளாக இஸ்ரேல் மக்களை ஹமாஸ் படை பிடித்துச் சென்றுள்ளது.

ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படுகிறது. போர் தொடர்வதால் இருதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தி தொலைக்காட்சி நடிகை மதுரா நாயக், தனது சகோதரி, அவரது கணவர் ஆகிய இருவரும் அவர்களின் குழந்தைகள் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடைய குடும்பத்தினர் எதிர்கொண்ட கொடுமையை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஹமாஸ் படையினரால் இஸ்ரேலில் தெருக்கள் தீப்பற்றி எரிகின்றன என அவர் கூறியுள்ளார். இந்திய வம்சாவளியான யூத பெண் மதுரா நாயக், நாகின் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in