காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி டிடிஎஃப் வாசன் கொண்டாட்டம்!

காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன்
காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன்

போக்குவரத்து விதிமீறல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள டிடிஎஃப் வாசன், காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றார். அப்போது ரசிகர்கள் கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் இயக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். அப்போது அவரது ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதும், அவருடன் செல்பி எடுப்பதுமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இறுதி நாளான பத்தாம் நாள் இன்று அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திடுவதற்காக வழக்கறிஞருடன் டிடிஎப் வாசன் வந்தார். காவல் நிலையத்திற்குள் சென்று கையெழுத்திட்டு வந்து வெளியே வந்தபோது, அவரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.

பிறந்தநாள் கேக் வெட்டிய வாசன்
பிறந்தநாள் கேக் வெட்டிய வாசன்

அப்போது மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர், பிறந்த நாள் கேக் ஒன்றை கொண்டு வந்தார். இதைப் பார்த்து ஒருகணம் யோசித்த டிடிஎஃப் வாசனிடம், "உங்களுக்கு இன்னும் 20 நாட்களில் பிறந்த நாள் வருகிறது. அதனால், எங்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும்" என்று அன்பு கட்டளையிட்டார். இதையடுத்து பிறந்தநாள் கேக் வெட்டிய வாசன், அதனை ரசிகர்களுக்கு ஊட்டி விட்டார். பின்னர், ரசிகர்களும் வாசனுக்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்ந்தனர். பின்னர், அவர்களுடன் செல்பி, புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in