ரெமல் புயலால் அசாம், மணிப்பூரில் கடும் சேதம் - நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட லாரி; வைரல் வீடியோ!

நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்படும் லாரி
நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்படும் லாரி
Updated on
2 min read

ரெமல் புயல் மற்றும் கனமழை காரணமாக அசாம், மணிப்பூர் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலை நிலச்சரிவில் லாரி சிக்கி, பள்ளத்தாக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்கம், வங்கதேசம் இடையிலான பகுதியில் கரையை கடந்தது. புயல் பாதிப்பால் அப்பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரெமல் புயலால் மணிப்பூர், அசாம் மாநிலங்களிலும் தற்போது கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீசும் பலத்த காற்று, கன மழை போன்றவற்றால் அம்மாநிலங்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

மணிப்பூரில் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இம்பால் - ஜிரிபாம் நெடுஞ்சாலையில் ஒரு லாரி, நிலச்சரிவால் பள்ளத்தாக்கில் அடித்துச்செல்லப்பட்டது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் இம்பால் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (என். எச். - 37) இன்று காலை நடந்துள்ளது.

கனமழையால் மாநிலத்தில் பரவலாக வெள்ள பாதிப்பு, போக்குவரத்து இடையூறுகள், பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும், காங்போக்பி, சேனாபதி மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநிலத்தில் எதிர்மறையான நிலைமைகள் இருந்தபோதிலும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்தது
அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்தது

இதேபோல், அசாம் மாநிலத்திலும் பலத்த மழை மற்றும் புயலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள திகல்போரியில் மாணவர் பயணித்த ஆட்டோ மீது மரம் விழுந்தது. இதில் அந்த மாணவர் உயிரிழந்தார். இதேபோல், சோனித்பூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 12 குழந்தைகள் காயமடைந்தனர். ரெமல் புயல் கரையை கடந்தும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in