10 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை சேர்த்து நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் திரிணமூல் காங்கிரஸ்!

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி, 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், ராய்கஞ்ச், ராணாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்டாலா ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் சில எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் காலியாக உள்ள 6 தொகுதிகளையும் சேர்த்து 10 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என அம்மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்
தேர்தல்

இதுதொடர்பாக அக்கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில், மக்களவைத் தேர்தலில் எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற்றதால் மதாரிஹாட், நைஹாட்டி, தல்தாங்க்ரா, மேதினிப்பூர், சீதாய், ஹோராவ் ஆகிய 6 தொகுதிகள் விரைவில் காலியாக உள்ளன.

எனவே, அவற்றையும் சேர்த்து 10 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்துவது சரியானதாக இருக்கும். இடைத்தேர்தல் நடத்தும் முறையானது மேற்கு வங்க அரசை நியாயமற்ற முறையில் குறி வைப்பதாக உள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி

இது அரசின் சுமூகமான செயல்பாடு மற்றும் தினசரி நிர்வாகத்தை கடுமையாக பாதிக்கும். ஒரு மாநிலத்தை தொடர்ந்து தேர்தல் முறையில் வைத்திருப்பது எந்த நோக்கத்தையும் அளிக்காது. குறிப்பாக சரியான காரணம் இல்லாமல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரே நேரத்தில் காலியாக உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதற்கு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in