அண்ணாமலை Vs தமிழிசை சௌந்திரராஜன்... தமிழக பாஜகவில் வெடித்தது மோதல்

அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன்
அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து, மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என பாஜகவினர் ரெண்டுபட்டிருக்கின்றனர்.

ஆரவாரத்தோடு ஆரம்பித்த மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சாரம், தமிழகத்தில் 2 முதல் 5 இடங்களில் அக்கட்சி வெல்லும் என்ற கருத்துக்கணிப்புகளுக்கு வழி செய்தது. ஆனால் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை உட்பட பாஜக வேட்பாளர்கள் அனைவருமே படுதோல்வி அடைந்தனர். மூத்த தலைவர் பொன்னார் மற்றும் ஆளுநர் பதவியை உதறிவிட்டு மத்திய அமைச்சர் கனவில் அரசியலில் மீண்டும் குதித்த தமிழிசை ஆகியோரும் இந்த தோல்வியில் அடக்கம்.

தமிழிசை - அண்ணாமலை
தமிழிசை - அண்ணாமலை

தேர்தலின் தோல்வி முடிவுகளை அடுத்து பாஜகவில் அண்ணாமலையை விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதிலும் தமிழிசை போன்ற முன்னாள் மாநிலத் தலைவர்கள் வெளிப்படையாகவே தங்கள் விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். குறிப்பாக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டது தொடர்பாக தமிழிசை குறைபட்டார். மேலும் பாஜக தலைவர்களை சமூக ஊடகங்களில் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கட்சியின் இணையக்குழுவினருக்கு எதிராக, முன்னாள் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் முழங்கினர்.

அண்ணாமலைக்கு எதிரான தமிழிசையின் சாடல் அதிகரித்ததும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா போன்றோர், அதே பாணியில் பொதுத்தளத்தில் பதிலடியை தந்துள்ளார். “அக்கா வணக்கம். தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான். வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா

கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம். அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா?

பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா? இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னாள் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in