இவ்வளவு வசதிகளா?.... பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம்!

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் முகப்பு.
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் முகப்பு.

திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும், ரூ.1,112 கோடி மதிப்பிலான திட்டத்தை கடந்த 2019- ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அதன்படி பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரத்து 480 பயணிகளை கையாள முடியும். புதிய முனையத்தில் 104 இமிகிரேசன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 5 ஏரோ பிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

திருச்சி சர்வதேச விமான நிலையம் கடந்த ஆண்டு மட்டும் 17.60 லட்சம் பயணிகள் கையாண்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், முதல் விமானமாக அந்த முனையத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த, விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in