தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 7-10-2023 (சனிக்கிழமை, நாளை) மற்றும் 8-10-2023 (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று  சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in