
ஸ்வீடனில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக் கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடன் நாட்டின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆற்றங்கரை மற்றும் மலைச்சரிவான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அந்த நாட்டில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஸ்வீடனில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அண்டை நாடான நார்வேயிலும் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனது. இருநாடுகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நார்வேயில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து இருப்பதாக கூறப்படுகிறது.