குமரியின் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறு ஆகிய அனைத்து ஆறுகளும் வறண்ட காணப்பட்டு வந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.

அருவியில் சுற்றுலாப் பயணிகள்
அருவியில் சுற்றுலாப் பயணிகள்

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை செய்து வரும் நிலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் 48-அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 46-அடியை தாண்டி தற்போது 45.59 அடியை எட்டிய நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முதல் பேச்சுப்பாறை அணையில் இருந்து 2500-கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி

இதனை அடுத்து கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in