குற்றால அருவிகள் குறைந்தது நீர் வரத்து... சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நீண்ட வரிசை!

குற்றாலம் அருவி
குற்றாலம் அருவி

குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ள போதும், நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சிறுவன் ஒருவன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

குற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
குற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு குறைந்து குற்றாலம் அருவிகளில் சீரான தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தற்போது நீர்வரத்து குறைவாகவே இருந்த போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்

இதேபோல் பழைய அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளபோதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் குளிப்பதற்காக வருகை தருகின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதால், போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனத்துறையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்காணிப்பதற்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in