மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் இதே நிலைதான். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆளுநர் ரவி, நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். இதனால் தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அடைந்தது.

R Senthil Kuma

பெரும்பாலான மசோதாக்கள், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை அரசே செய்யும் வகையிலான திருத்தத்தை மேற்கொள்வதாக உள்ளது. இதில் மருத்துவ பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவையும் உள்ளன.

இந்நிலையில்,  இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த துறையின் அமைச்சர்கள் மசோதாக்களை அவையில் அறிமுகம் செய்வார்கள். மசோதாவை ஆட்சேபிக்கும் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பர்.

ஆட்சேபனை இருந்தால் அந்த மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு அமைச்சர் பதிலளிப்பார். பின்னர் பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து மீண்டும் மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே சட்டசபை சிறப்புக் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in