இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முதலே விடிய விடிய தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்திறு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in