இன்று புதன் பிரதோஷ வழிபாடு... செல்வம் வளர இதை தானம் செய்து வழிபடுங்க!

பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு

இன்று பிப்ரவரி 7ம் தேதி புதன் பிரதோஷ தினத்தில் பசியில் வாடுபவர்களுக்கு தயிர் சாதம் தானமளித்து வழிபடுங்க. இன்று மாலை பிரதோஷ கால வேளையில் சிவபெருமானை வணங்கி, நந்திதேவரை ஆராதிப்போம். சனி பிரதோஷ தரிசனத்தைப் போலவே புதன் பிரதோஷமும் பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும்.

சிவ வழிபாடுகளில் சிவராத்திரி தினங்களைப் போலவே மிக மிக முக்கியமானது பிரதோஷ கால பூஜை. திரயோதசி திதி நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம்.

இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு விமரிசையாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது சிவபுராணம். புதன் கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம், நமக்கு பொன்னும் பொருளும் தரக்கூடியது.

பிரதோஷ விரதம் இருந்தும் சிவ புராணம் படித்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவபெருமானை வழிபடலாம். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், சிவபுராணம் படித்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் சொல்லிக் கொண்டே இருப்பதும் மகா புண்ணியம் தரும்.

புதன் கிழமை பிரதோஷ நன்னாளில், மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்துங்கள். சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். பிரதோஷத்தின் போது, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த நைவேத்தியப் பொருட்களை வழங்கி சிவ தரிசனம் செய்வது இன்னும் பல நன்மைகளை வழங்கும்.

தஞ்சை பெரியகோயில் நந்தி
தஞ்சை பெரியகோயில் நந்தி

மேலும், பிரதோஷ நாளில் பசியோடு இருப்பவர்களுக்கு தயிர்சாதம் வழங்கி, பசுவுக்கு உண்பதற்கு பழங்கள் வழங்குங்கள். அப்படி வழங்கும் தருணத்தில் ‘நமசிவாய நமசிவாய நமசிவாய’ என்று மூன்று முறை சொல்லி வழங்குங்கள். தென்னாடுடைய சிவனாரின் பேரருள் கிடைக்கும். பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை வளம்பெறும்.

இதையும் வாசிக்கலாமே...


வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in