மக்களவைத் தேர்தல்... 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு: காலை 7 மணிக்கே தொடங்கியது!

மக்களவைத் தேர்தல்... 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு: காலை 7 மணிக்கே தொடங்கியது!

ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கான 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஏப்ரல் 26, மே 7, 13,20 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இதுவரை ஆறுகட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

இன்று ஏழாம் கட்டமாக இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அதன்படி 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 தொகுதிகள், பஞ்சாப் மாநிலத்தில் 13, மேற்கு வங்கம் 9, பீகார் 8, ஒடிசா 6, இமாச்சலப் பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3 மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, கோரக்பூர் தொகுதியில் ரவி கிஷன், பாட்னா சாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத், பாட்லிபுத்ராவில் இருந்து மிசா பார்தி, நடிகை கங்கனா ரனாவத், அனுராக் தாக்குர், விக்ரமாதித்ய சிங், அபிஷேக் பானர்ஜி உள்பட ட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இறுதி கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிவடையவுள்ள நிலையில் வருகிற 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in