இன்று தமிழகத்தில் 12,525 கிராமங்களில் கிராமசபைக் கூட்டம்!

கிராம சபை
கிராம சபை

தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. உங்க சொந்த ஊருக்கு இந்த தொடர் விடுமுறைக்கு சென்றிருந்தால் மிஸ் பண்ணாதீங்க. உங்களுடைய அடிப்படை உரிமைகளை கிராம சபை மூலமாக மீட்டெடுக்க முடியும்.

கிராமசபைக் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற பொதுமக்களின் குறைகளை கேட்டறிய குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளர்கள் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலக நீர் தினம் (மார்ச் 23), உள்ளாட்சிகள் தினம் (நவ.1) ஆகிய முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் அக்.2 ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டம் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் நடைபெறும். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழி கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், அனைத்து பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கிராமங்களில் இருக்கும் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!

சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!

சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in