இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை... கலெக்டர் உத்தரவு!

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடைகூடுதல் பணம் கேட்டால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் கடைகளுக்கு எச்சரிக்கை!

இன்றும், நாளையும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினையொட்டி நாளை நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லிமலையில் செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நாளை வரை மூட மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

கொல்லிமலையை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பறைசாற்றும் வகையில், 1975ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு சார்பில் வல்வில் ஓரி விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்றும், நாளையும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

அதே சமயம், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வல்வில் ஓரி விழாவிற்கு பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நாளை வரை டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். தடை விதிக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள், பார்களைத் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனைச் செய்வது தெரிய வந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in