ஆபரணத்தின் தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, 44,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கமாக தங்கம் விலை இருந்து வருகிறது. முதலில் சரிவைக் கண்ட தங்கம் விலை, இன்றைக்கு உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,520 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,565 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,520 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.
இதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து, 6071 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து, 48,568 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு 0.50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து 80,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவது பெண்களைக் கலக்கமடைய செய்துள்ளது.